கொல்லிமலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-13 03:00 GMT

கொல்லிமலை ஊர்முடிப்பட்டி கிராம சாலையை சீரமைக்கக்கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லிமலையில் உள்ள, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கொல்லிமலை சேளூர்நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ரேசன் கார்டுகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கொல்லிமலைப் பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர். சிபிஎம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News