நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

Update: 2024-05-15 09:53 GMT

நாமக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 14வது இடத்தைப் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 (11ம் வகுப்பு) பொதுத் தேர்வில், மொத்தம் 197 பள்ளிகளை சார்ந்த 9046 மாணவர்களும், 9252 மாணவிகளும் என மொத்தம் 18,298 பேர் தேர்வு எழுதினார்கள். தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 8,172 மாணவர்களும் 8,767 மாணவிகளும் என மொத்தம் 16,941 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 90.36 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி 94.76 சதவீதம். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.58 சதவீதம் ஆகும்.

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசுப் பள்ளிகளை சார்ந்த மொத்தம் 9,285 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினார்கள். இதில் 8,147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி 87.74 சதவீதம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு ஆதி திராவிட நல பள்ளியினை சார்ந்த மொத்தம் 81 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 83.95 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 4 பழங்குடியினர் நல பள்ளிகளை சார்ந்த மொத்தம் 278 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 259 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.17 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 1 சமுக நலத்துறைப் பள்ளியில் மொத்தம் 8 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினார்கள். இதில் 8 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.

இவ்வாண்டு பிளஸ் 1 தேர்வில் மொத்தம் 48 பள்ளிகள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 6 பள்ளிகள் நூற்றுக்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் தேர்ச்சி சதவீத அடிப்படையில், தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் இந்த ஆண்டு 14வது இடத்தைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News