நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-05-06 10:00 GMT

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,77,587 பேருக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 2,37,413 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி, இதுவரை மொத்தம் 9,80,338 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இன்னும் 2,97,249 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடந்த 28 மெகா தடுப்பூசி முகாம்களில் 7,84,059 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றுள்ளனர். வருகிற 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 29ம் கட்டமாக அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,769 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசிகூட போடாதவர்களும்,  முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News