மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை: கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-31 15:03 GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர், காலாண்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்குறுதி செய்யும் கருவிகள் ஆகியன மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையில், போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு அறையில் சுமார் 4216 எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்களும், 2622 கட்டுப்பாட்டுக் கருவிகளும்,970 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 7,806 எலக்ட்ரானிக் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறை சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மற்றும் தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News