மோகனூரில் சமத்துவ கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

மோகனூர் அருகே சமத்துவ கேக் வெட்டப்பட்டு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Update: 2021-12-24 01:30 GMT

மோகனூர் அருகே ஆர்.சி. பேட்டப்பாளையம் தொடக்கப்பள்ளியில், சமத்துவ கேக் வெட்டப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், பல புதிய பணிகளைத் துவங்குவதையும், அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள ஆர்.சி.பேட்டபாளையம் புனித செசிலி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் இலக்கிய மன்ற விழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சார்லஸ், மாவட்ட கவுன்சிலர் ருத்ராதேவி, ஊராட்சி தலைவர் குப்பாயி, வார்டு உறுப்பினர் ஆரோன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாணவர்களைக் கொண்டு, சமத்துவ கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News