சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகள் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

2021-22 கல்வியாண்டிற்கு சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2021-08-31 11:00 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங். 

நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டிற்கு சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் தூய்மைப்பணி செய்வோர், குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவர்கள், தோல் பதனிடும் தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஸ்காலர்ஷிப் பெற சாதி மற்றும் மதம் தடையில்லை, வருமான வரம்பு இல்லை.

கல்வி உதவித்தொகை பெறும் தகுதியுள்ள மாணவர்களின் வங்கிக்ககணக்கில் பணம் செலுத்தப்படும். உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட பள்ளியிலே பெற்றுக் கொள்ளலாம். அவற்றில் பெற்றோரின் தூய்மை பணி செய்யும் இடத்தில் பணிச்சான்று, உரிய அலுவலரிடம் பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை 94439 07504 என்ற போன் நம்பரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News