சர்வதேச காலநிலை நடவடிக்கை தின விழா - கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

சர்வதேச கால நிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Update: 2024-10-25 07:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற சர்வதேச காலநிலை நடவடிக்கை தின விழாவில், கலெக்டர் உமா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

சர்வதேச காலநிலை நடவடிக்கை தின விழா கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

நாமக்கல், அக். 26-

சர்வதேச கால நிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். நார்வே அகதிகள் கவுன்சிலின் கூற்றுப்படி, போர் அல்லது உள்நாட்டு மோதல்களைவிட 3 மடங்கு அதிகமான மக்கள் தீவிர சுற்றுச்சூழல் நிகழ்வுகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். காலநிலை மாற்றம் என்பது புவி வெப்பமடைதலுக்கு முக்கிய கராணமாகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் தணிப்புக்கான நடவடிக்கைகளை உலக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். வருங்கால சந்ததியினரை குறைந்தபட்சம் இப்போது இருப்பதைப் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளுடன் விட்டுவிடுவதற்குப் பதிலாக, அதிக அளவு கார்பன் உமிழ்வுகள் ஏற்பட்டால் எதிர்கால சந்ததியினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே வனங்களைப் பாதுகாத்தும், மரங்களை அதிக அளவில் நட்டும், பசுமை பரப்பை அதிகரிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தின் கணிக்க முடியாத தாக்கங்களை சமாளிக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்துவருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில், சர்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை தினத்தை முன்னிட்டு, மரம் நடும் விழா, நாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கலெக்டர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நாமக்கல் வடக்கு ஆர்டிஓ முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி, ரெட்கிராஸ் சங்க மாட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News