350 டிவி, 3.3 TB நெட், 20 ஓடிடி - மூனும் சேர்த்து ஜஸ்ட் ரூ. 599 க்கு...! நம்ப முடியுதா? ஏர்டெல் தராங்களே..!

350 டிவி, 3.3 TB நெட், 20 ஓடிடி - எல்லாம் சேர்த்து ஜஸ்ட் ரூ. 599 க்கு...! நம்ப முடியுதா? ஏர்டெல் தராங்களே..!;

Update: 2024-10-24 10:54 GMT

கேபிள்டிவி காரங்க வைக்குறதுதான் இப்ப சட்டமாகிட்டது. டிவி தெரியலைனு கூப்பிட்டா இந்த பாக்றோம்னு பத்து நிமிசத்துல கிளியர் பண்ணித் தரோம்பாங்க. ஆனா நாள் முழுக்க டிவி செயல்படாம அலையடிச்சிட்டே இருக்கும். இதுல சரியா மாசம் ஆனா 230 ல இருந்து 250 ரூபாய் வரைக்கு வசூலிக்க வந்துடுவாங்க. ஆனா பாருங்க கேபிள் கணக்கு வசூலிக்க வர்றப்ப மட்டும் டிவி லைன்ல எந்த பிரச்னையும் இருக்காது என்று புலம்பிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

கேபிள் டிவியில் படம் பார்ப்பவர்களுக்கு இதேநிலைமைதான் நாடு முழுவதும். சரி டிஸ் போயிடலாம்னு பாத்தாலும் ஏகப்பட்ட விலை சொல்றாங்க. இதோட சேர்த்து வீட்ல இண்டர்நெட் கணெக்சன் கட்டாயமா எடுக்க வேண்டிய காலம் இது.

இருக்குற நண்டு சிண்டுங்க கூட ஆன்லைன் கொரியன் சீரிஸ் பாக்க ஆவலா இருக்குதுங்க. இளைஞர்கள் இருக்குற எல்லா ஓடிடி பிளாட்பார்களையும் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிட்டு படம் பார்க்கணும் பாத்து மீம் போட்டுட்டும், ரிவீயூ போட்டுட்டும் இருக்காங்க. இப்படி இண்டர்நெட், ஓடிடி, கேபிள்னு நம்ம தனித்தனியா போட்டா 250 + 499 + ஒவ்வொரு ஓடிடிக்கும் அதற்கேற்ப சந்தானு 1000, 2000 ரூபாய் இதுக்கே செலவாகிடுது. இதுக்கெல்லாம் தீர்வே இல்லையானு யாரோ ஒருத்தர் வானத்த பாத்து கத்திருக்கணும். அது ஏர்டெல்லுக்கு கேட்டுருக்கணும்.

கேட்டுச்சோ இல்லையோ.. அவங்க சரியான திட்டத்த இறக்கி மக்கள் பல்ஸ பாத்துட்டு இருக்காங்க.

டிவி சேனல் பாக்றவங்களும் சரி, இண்டர்நெட் தேவைப்படுறவங்களும் சரி, ஓடிடி ல படம் பாக்குறவங்களும் சரி இனி தனித்தனி பிளான் எதுவும் போட வேண்டாம். மொத்தமா 599 போதும். வேற லெவல் திட்டத்த செயல்படுத்திட்டு இருக்காங்க ஏர்டெல்.

மொத்தம் 3 திட்டங்கள் 1000ரூ க்கும் கம்மியா இருக்கு.

1. ரூ.599 திட்டம்

2. ரூ.699 திட்டம்

3. ரூ.899 திட்டம்

ஏர்டெல் ரூ.599 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் | Airtel Rs 599 Broadband Plan Benefits :

  • வேகம் : 30 Mbps
  • டேட்டா : 3.3 TB
  • ஓடிடி : 20+
  • டிவி சேனல்கள் : 250+

இந்த திட்டத்தின்படி 30 Mbps வேகத்துடன் நீங்கள் இணையத்தை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின்படி ஒரு மாதத்தில், 3.3டிபி அளவிலான டேட்டா உங்களுக்கு கிடைக்கும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) உட்பட 20 க்கும் மேற்பட்ட ஓடிடி பிளாட் ஃபார்ம்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் நீங்கள் 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை பார்க்க முடியும். கூடுதலாக இதில் ஹெச்டி தரத்திலான சில சேனல்களும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை 3 மாத திட்டமாக (3 Months Plam) அதாவது காலாண்டு திட்டமாக (Quaterly Plan) நீங்கள் தேர்வு செய்தால், உங்களுக்கு வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router) இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, இன்ஸ்டாலேஷன் (Free installation) இலவசமாக செய்து தருவார்கள்.

ஏர்டெல் ரூ.699 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் | Airtel Rs 699 Broadband Plan Benefits:

  • வேகம் : 40 Mbps
  • டேட்டா : 3.3 TB
  • ஓடிடி : 20+
  • டிவி சேனல்கள் : 250+

இந்த திட்டம் 40 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது. இதன் கீழும் 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உட்பட 20க்கும் மேற்பட்ட ஓடிடிகளுடன் வருகிறது. 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (இதில் எச்டி சேனலக்ளும் அடக்கம்) வழங்குகிறது. கூடுதலாக இதில் ஹெச்டி தரத்திலான சில சேனல்களும் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தை 3 மாத திட்டமாக (3 Months Plam) அதாவது காலாண்டு திட்டமாக (Quaterly Plan) நீங்கள் தேர்வு செய்தால், உங்களுக்கு வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router) இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, இன்ஸ்டாலேஷன் (Free installation) இலவசமாக செய்து தருவார்கள்.

ஏர்டெல் ரூ.899 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் | Airtel Rs 899 Broadband Plan Benefits :

  • வேகம் : 100 Mbps
  • டேட்டா : 3.3 TB
  • ஓடிடி : 20+
  • டிவி சேனல்கள் : 250+

இது 100 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வரும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாகும். இதன் கீழும் 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உட்பட 20க்கும் மேற்பட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் கிடைக்கும், 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை நாம் பார்க்க முடியும்.

இந்த திட்டத்தை 3 மாத திட்டமாக (3 Months Plam) அதாவது காலாண்டு திட்டமாக (Quaterly Plan) நீங்கள் தேர்வு செய்தால், உங்களுக்கு வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router) இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, இன்ஸ்டாலேஷன் (Free installation) இலவசமாக செய்து தருவார்கள்.

ஜிஎஸ்டி வரிகளுடன் சேர்த்து மூன்று திட்டங்களும் கூடுதல் கட்டணத்துடன் நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாக, 699 மதிப்புள்ள திட்டத்தை ஜிஎஸ்டி சேர்த்து ஏறக்குறைய 850 ரூபாய் வசூலிக்கப்படும்.

Tags:    

Similar News