நாமக்கல் மாவட்டத்தில் உரம் இருப்பை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

நாமக்கல் மாவட்டம் முழுவதும், உரக்கடைகளில் உரம் இருப்பை கண்காணிக்க, வேளாண்மைத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-09 10:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உரம் இருப்பை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் முழுவதும், உரக்கடைகளில் உரம் இருப்பை கண்காணிக்க, வேளாண்மைத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தற்சமயம் பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. உர இருப்பில் யூரியா 2,521 மெட்ரிக் டன், டிஏபி 802 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,365 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,582 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 474 என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேளாண் பயிர்கள் சாகுபடி தீவிரம் அடைந்துள்ள நிலையில் பயிர்களுக்கு தேவையான உரங்கள் சரிவர விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்திட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வேளாண்மை உதவி இயக்குநர் வேலு (9842543215) மற்றும் வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் (8610071491) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது:

மாவட்டத்திலுள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளை, இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது. உரங்களை விற்பனை செய்யும் போது உர முட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட அதிகம் வைத்து விற்பனை செய்ய கூடாது. விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். உர நிறுவனங்களில் உரங்களின் இருப்பு, அதன் விலை குறித்த விலைப்பட்டியல் இருத்தல் வேண்டும். விதிகளை மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உர விற்பனை லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மேலும், லைசென்ஸ் இல்லாமல் உரம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களுக்கு மாநில அளவிலான வாட்ஸ்அப் எண் 9363440360 மூலம் தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News