அனைத்து மோட்டார் வாகன சான்றிதழ்களும் அக்.31 வரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு

லாரிகள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன சான்றிதழ்களும் அக்.31 வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-09-30 14:00 GMT

பைல் படம்.

நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்துப்பட்டது. இதனால் பஸ்கள், டாக்சிகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் இயக்க முடியவில்லை. அத்தியாவசியம் கருதி லாரிகள் மட்டும் இயக்கப்பட்டன. இருப்பினும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதால் லாரிகளை முழுமையாக இயக்க முடியவில்லை. பல லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் பல மாநிலங்களில் ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. சில இடங்களில் குறைந்த நேரம் மட்டுமே அலுவலகங்கள் இயங்கின. இதனால் கடந்த 2020 பிப்ரவரி 29 முதல் 2021 ஆகஸ்ட் வரை காலவாதியான அனைத்து வாகன எப்.சி உள்ளிட்ட சான்றிதழ்களும், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழ்களும், இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும், கொரோனா ஊரடங்கு முழுமையாக விலக்கப்படாத நிலையில், லாரிகள் உள்ளிட்ட மோட்டார் வாகனம் சார்ந்த அனைத்து சான்றிதழ்களும், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழ்களும் வருகிற அக்.31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமான சுற்றறிக்கை அனைத்து மாநில மற்றும் யூனியன்பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News