பார்த்தீனியம் செடிகளால் பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை

Parthenium Plant Effects - பார்த்தீனியம் செடிகள் பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து நாமக்கல் வேளாண் ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-11 01:45 GMT

பைல் படம்.

Parthenium Plant Effects - இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் , வேளாண் வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பார்தீணியம் என்ற களைச்செடி தற்போது நாடு முழுவதும் விவசாயம், விவசாயம் அல்லாத நிலங்கள் அனைத்திலும் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக இச்செடி விதை காற்றின் மூலம் எளிதில் பரவி விரைவாகவும் பரவளாகவும் வளரக்கூடியதாகும். பொது இடங்கள், விளை நிலங்கள் என்று இச்செடி பரவலாக காணப்படும். இச்செடி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் தோல் மற்றும் சுவாசகுழாய் நோய்கள் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. விளை நிலங்களில் இச்செடி

பரவுவதால் மகசூல் பெரிதும் பாதிக்கபடும். தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும் பார்தீனியத்தினை கையுரை அணிந்து கைக்களையாக அகற்றி விட வேண்டும். அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆவாரை, துத்தி, நாய்வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இந்த செடிகளின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளர விடாமல் தடுத்து விடும். மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். ஆகையால் மெக்ஸிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News