நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.53 கோடி ரொக்கம் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 5,30,606 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 53 கோடி ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-26 01:00 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்டத்தில், 5,30,606 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 53 கோடி ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள பொதுமக்கள், தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கும், மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட உத்தரவிட்டார். மேலும், சென்னையில் நடைபெற்ற விழாவில் அவர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் நகராட்சி, முல்லை நகர் ரேசன் கடையில், கடந்த 9ம் தேதி நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா பகுதியில் உள்ள, 914 ரேசன் கடைகளில், 5,42,083 ரேசன் கார்டுதாரர்களுக்கும், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம் மற்றும் மோகனூர் ஆகிய இடங்களில் உள்ள 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும், 673 ரேசன் கார்டுதாரர்களுக்கும் என மொத்தம் 5,42,756 குடும்ப ரேசன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசாக, பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வந்தது.

இதுவரை, மாவட்டத்தில் 8 தாலுக்கா பகுதியில் உள்ள, 914 ரேசன் கடைகளில், 5,30,606 ரேசன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.1,000/- வீதம் ரூ. 53 கோடியே 6 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News