பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்; அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Namakkal news- பணிக்கொடையாக, ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என, நாமக்கல்லில் நடந்த அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-04-22 02:00 GMT

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற, அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில், மாநில செயலாளர் சாந்தமூர்த்தி பேசினார்.

Namakkal news, Namakkal news today- பணிக்கொடையாக, ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என, நாமக்கல்லில் நடந்த அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், கோட்ட அளவிலான, 12வது மாநாடு, நாமக்கல்லில் நடைபெற்றது. கோட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். மாநில செயலாளர் சாந்தமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அஞ்சலக ஊழியர்களுக்கு, 2019ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய ஆர்.பி.ஐ.எல். இன்சென்ட்டிவ் நிலுவை தொகையை பெற்றுத்தரவேண்டும். இறந்துபோன கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வாரிகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மகளிர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு, மகப்பேறு விடுப்புடன் கூடிய பணப்பலன்கள் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவ இன்சூரன்ஸ், குரூப் இன்சூரன்ஸ் ஆகியவை கமிட்டியின் பரிந்துரைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திரளான அஞ்சலக ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News