நாமக்கல் மாவட்டத்தில் திடீர் வாகன சோதனை: ரூ.1.88 கோடி வசூல்; 40 வாகனம் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்டிஓ அலுவலர்களின் வாகன தணிக்கையில் ரூ.1.88 கோடி வரி வசூல்; ஆவணங்கள் இன்றி இயக்கிய 40 வாகனங்கள் பறிமுதல்.

Update: 2021-11-13 08:00 GMT

பைல் படம்.

தமிழக அரசின் உத்தரவின் பேரிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின்பேரிலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, ராசிபுரம், பரமத்திவேலுர் பகுதியில் அந்தந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் 3,159 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்மூலம் 552 வாகனங்களில் நீண்ட நாட்களாக அரசுக்கு செலுத்தாமல் இருந்த வரி ரூ. 12 லட்சத்து 55 ஆயிரத்து 950 வசூல் செய்யப்பட்டது.

இதேபோல 638 வாகனங்களுக்கு ரூ. 1 கோடியே, 88 லட்சத்து, 40 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது. வாகனத்தின் தகுதிச் சான்று புதுப்பிக்காதது, பர்மிட் இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது என்ற அடிப்படையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News