சாக்கடை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்க மனு

கழிவுநீர் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2021-01-11 12:55 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் தங்கள் தெருவிற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் செல்ல சாக்கடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்பகுதியில் வசித்து வரும் காவலர் அசோகன் என்பவரும் இன்பரசன் என்பவரும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாக்கடை அமைந்துள்ளதாக கூறி சாக்கடையை கற்களாலும் அடைத்து விட்டனர். இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு காவலர் அசோகன் மீதும் இன்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் சாக்கடை வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News