நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்படும்: ஆட்சியா் தகவல்..!

நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்படும்: ஆட்சியா் தகவல்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-15 06:10 GMT

நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

புதிய சிற்றுந்துகள் திட்ட அரசாணை

தமிழகத்தில் சிற்றுந்துகள் இயக்கத்துக்கான புதிய விரிவான திட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மே 1 முதல் புதிய விரிவான திட்டம் அமலுக்கு வருகிறது.

புதிய சிற்றுந்து வழித்தடங்களை அனுமதிக்கும் அதிகாரம்

புதிய சிற்றுந்துகள் திட்டத்தின்படி, அனுமதிச் சீட்டு வழங்கும் தூரத்தை இறுதி செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சிற்றுந்து வழித்தடம் ஆட்சியரால் ஆய்வு செய்யப்படும்.

சிற்றுந்துகளில் அதிகபட்ச இருக்கைகள்

சிற்றுந்துகளில் ஓட்டுநா், நடத்துநா் தவிா்த்து அதிகபட்சமாக 25 இருக்கைகள் வரை அனுமதிக்கப்படும். புதிய கட்டண முறை மே 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க 45 புதிய வழித்தடங்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சிற்றுந்து அனுமதிக்கு விண்ணப்பிக்க

புதிய சிற்றுந்துக்கான விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்தும் ரூ. 1,600 கட்டணம் செலுத்தியும், முகவரி சான்று ஆவணத்தை இணைத்தும், வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரத்துக்கான செல்வ நிலைச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் வழித்தட எல்லைக்கு உள்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 5-க்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

புதிய சிற்றுந்து வழித்தட விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக தகவல் பலகையிலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான நாமக்கல் வடக்கு, தெற்கு, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூா், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையிலும் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News