நெருங்கும் கோடையால் கோழிப்பண்ணையில் நீராதாரங்களை தயாராக வைத்திருக்க அறிவுரை..!

நெருங்கும் கோடையால் கோழிப்பண்ணையில் நீராதாரங்களை தயாராக வைத்திருக்க அறிவுரை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-15 05:16 GMT

கோடைகாலம் துவங்க உள்ளதால், கோழிப்பண்ணைகளின் நீர் ஆதாரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட வானிலை அறிக்கை

இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தின், கடந்த வார வானிலையில், பகல் நேர வெப்பம், 95 டிகிரி பாரன்ஹீட், இரவில், 60.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் நிலவியது. மழை பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும். காற்று பெரும்பாலும் வட கிழக்கு திசையிலிருந்து, மணிக்கு, 10 கி.மீ., முதல், 12 கி.மீ., என்றளவில் வீசும்.

பகல் வெப்பம் இரவு வெப்பம் மழை வானம் காற்று

95°F 60.8°F 0 தெளிவு வடகிழக்கு, 10-12 கிமீ/மணி

வெப்ப அயற்சியை எதிர்கொள்ள ஆலோசனை

தற்போது நிலவி வரும், குறைந்த இரவு வெப்பமும், அதிகரித்து வரும் பகல் வெப்பமும் கோழிகளுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்த வல்லது. குறைந்த வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில், அதிக தீவனம் எடுக்க நேரிடும். பகலில் அதிக வெப்பம் இதற்கு நேர்மாறாக அயற்சியை ஏற்படுத்தி, எடை அதிகரித்த கோழிகளில் இறப்பை துாண்டிவிடக்கூடியது. அதனால், இருவேறு விதமான வெப்ப அளவுகளை எதிர்கொள்ள, தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க குறிப்பாக வைட்டமின், 'சி' மற்றும் கோலின் குளோரைடு மருந்துகளை சேர்த்து வர வேண்டும்.

கோடைகாலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மேலும், கோடைகாலம் விரைவில் துவங்க உள்ளதால், கோழிப்பண்ணைகளின் நீராதாரங்களை, நீர் தெளிப்பான்கள் மற்றும் நிப்பிள்களில் அடைப்பை நீக்கி தயாராக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News