அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா..!

அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-15 05:04 GMT

குமாரபாளையம் புத்தர் வீதியில், நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நுாற்றாண்டு விழா மற்றும் ஆண்டுவிழா தலைமையாசிரியை கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பி.டி.ஏ., தலைவர் வாசுதேவன், நிர்வாகிகள் பாலசுப்ரமணி, மாதேஸ்வரன், தண்டபாணி, கவுன்சிலர் வள்ளியம்மாள், பாண்டிசெல்வி, முன்னாள் தலைமை ஆசிரியைகள் முத்தமிழ்செல்வி, தில்லைக்கரசி உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News