அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நகர மன்ற தலைவர் பங்கேற்பு
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நகராட்சி தலைவர் பங்கேற்றார்.;
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நகர மன்ற தலைவர் பங்கேற்பு
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நகராட்சி தலைவர் பங்கேற்றார்.
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 23 வது ஆண்டு விழா தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று வாழ்த்தி பேசி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இப்பள்ளியில் படித்து மருத்துவராக பணியாற்றி வரும் முன்னாள் மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். நகராட்சி துணைத் தலைவர்வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், கனக லட்சுமி, மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெற்றோர் பெருமளவில் பங்கேற்றனர்.
படவிளக்கம் : குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.