மல்லசமுத்திரத்தில் ரூ. 5. 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
மல்லசமுத்திரத்தில் ரூ. 5. 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் அடுத்த சூரியகவுண்டம்பாளையத்தில் உள்ளது. நேற்று (பிப்.12) நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கருமனூர், பாலமேடு, மங்களம், மாமுண்டி, மதியம்பட்டி, மல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 215 மூட்டைகளை கொண்டு வந்தனர்.
இதில் பி. டி ரகம் குவிண்டால் ரூ. 7939 முதல் ரூ. 8425 வரையிலும், கொட்டு பருத்தி ரூ. 3360 முதல் ரூ. 4760 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக ரூ. 5.50 லட்சத்துக்கு விற்பனையானது. சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினர்.