மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் புதன்கிழமை விடப்பட்டன.;

Update: 2025-02-13 06:30 GMT

நாமக்கல் : மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் புதன்கிழமை விடப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் சென்ற வாகனங்களை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து வருகின்றனா். 2 மாதங்களுக்கு ஒரு முறை அவை பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

அந்த வகையில், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை 41 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. ஏலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தொடங்கி வைத்தாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலையில் ஏலத்துக்கான முன்தொகை செலுத்தியிருந்தோா் வாகனங்களை பாா்வையிட்டு வாங்கினா்.

மொத்தம் ரூ. 20 லட்சம் வரையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை ஏலம் எடுத்தோா் தாமதமின்றி செலுத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு தெரிவித்தாா்.

Tags:    

Similar News