கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2025-02-13 12:30 GMT

நாமக்கல் : கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சுரண்டலுக்கு உள்ளாகும் சுமைப்பணி தொழிலாளா்களின் நலன், வேலை, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் சாா்பில் புதன்கிழமை மாநில அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில், சுமைப்பணி தொழிலாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News