தமிழ் மாநில முற்போக்கு பொதுத்தொழிலாளார்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் தமிழ் மாநில முற்போக்கு பொதுத்தொழிலாளார்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-30 14:45 GMT

குமாரபாளையத்தில் தமிழ் மாநில முற்போக்கு பொதுத்தொழிலாளார்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தமிழ் மாநில முற்போக்கு பொதுத்தொழிலாளார்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் செயலர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அமைப்பு சாரா மற்றும் கட்டுமான நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறுபவர்களை விசாரணை என்ற பெயரில் நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு பெற்ற அனைவர்க்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் 50 சதவீத பஸ் கட்டணம் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்து விட்டால் ஈமச்சடங்கு நிதியாக 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில செயலர் ராஜாமணி, நிர்வாகிகள் மனோகரன், பஞ்சாலை சண்முகம், குருநாகலிங்கம், தேவராஜன், சித்ரா, உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News