குமாரபாளையத்தில் நடந்த நூலகம் கட்டுமான பணி பூமி பூஜையில் தள்ளு முள்ளு

குமாரபாளையத்தில் நூலகம், அறிவுசார் மையம் பூமி பூஜையில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2022-08-10 11:45 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற நூலகம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தரப்பினருக்கும், நகர தி.மு.க. செயலாளர் செல்வம் தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 2023ன்படி குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம், என்று கூறியதாக தெரிகிறது.

இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:

இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி, நாங்கள் பங்கேற்போம். எங்களை இருக்க கூடாது என சொல்லகூடாது. மூத்த அமைச்சர் நேரு இரு நாட்களுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ள பாதிப்பு மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணியாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். சேர்மன் நாங்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News