கோடை வெப்பத்தால் தினசரி காய்கறி மார்க்கெட், சாலையோர வியாபாரிகள் அவதி..!

கோடை வெப்பத்தால் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட், சாலையோர வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;

Update: 2024-04-28 13:45 GMT

தினசரி காய்கறி மார்க்கெட், குமாரபாளையம்.

கோடை வெப்பத்தால் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட், சாலையோர வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோடை வெப்பம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் இருக்கும் மூன்றாவது இடமாக ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் மேலும் வெப்ப நிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுளளது.

குமாரபாளையம் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் சாலை வியாபாரிகள் பல நூறு பேர் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக உள்ளனர். வெப்பம் தாங்க முடியாமல் அவ்வப்போது சோர்ந்து போகுதல், மயங்கி விழுதல் ஆகியன நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே புதிதாக கட்டப்பட்டு, சமீபத்தில் திறப்பு விழா செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, பழங்கள், கீரைகள், மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்து தொழில் செய்து வருகிறார்கள்.

இதன் மேலே தகர சீட் போட்டுள்ளதால் வெப்ப அனலால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இங்கும் வயதானவர்கள் அதிக அளவில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மார்க்கெட் வியாபாரிகள், சாலையோர கடை வியாபாரிகளுக்கு அரசு சார்பில் மருத்துவமுகாம் அமைத்து, போதிய ஊட்டச்சத்து மருந்து கொடுத்து, கோடை வெப்பத்திலிருந்து காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News