ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
குமாரபாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;
குமாரபாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
குமாரபாளையம் மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் தலைவர் ராஜண்ணன் தலைமையில் நடந்தது. ஏப். 19ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு செய்ய, வயது மூப்பின் காரணமாக ஓட்டுச்சாவடிக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலமில்லாத நபர்களை குமாரபாளையம் நேஷனல் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுச்சாவடிக்கு இலவசமாக அழைத்து வந்து, ஓட்டுப்பதிவு செய்ய வைத்தனர்.
இவர்கள் சேவையை பாராட்டி, மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில், ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரகாஷ் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி பாராட்டினர். சங்க நிர்வாகிகள் இவர்களின் சேவையை பாராட்டி பேசினார்கள். 38 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த சங்கம் சார்பில் வரும் காலத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம், பொது சிகிச்சை முகாம், ஏழை மாணாக்கர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியரை கௌரவப்படுத்துதல், ஆதரவற்ற முதியோர் மையங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் என்பன உள்ளிட்ட சேவைகளை செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் செயலர் ராஜேந்திரன், பொருளர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.