கள்ளத்தொடர்பு நபரை தாக்கிய கணவன் தரப்பினர்

குமாரபாளையத்தில் கள்ளத்தொடர்பு நபரை கணவன் தரப்பினர் தாக்கினர்.;

Update: 2025-02-07 11:45 GMT

கள்ளத்தொடர்பு நபரை தாக்கிய கணவன் தரப்பினர்

குமாரபாளையத்தில் கள்ளத்தொடர்பு நபரை கணவன் தரப்பினர் தாக்கினர்.

குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் பகுதியை சேர்த்தவர் இளங்கோ, 34. டைலர். இவரது வீட்டில், ஜனா என்பவர் பிப். 3, இரவு 09:00 மணியளவில், தன் நண்பர்கள் சிலருடன், ஜனா என்பவர் வந்து, தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ளாய். இது பற்றி பேசணும் என்று கூறி, டூவீலரில் அழைத்து சென்றனர். பவானி அரசு மருத்துவமனை அருகே உள்ள இரு கூரை கொட்டாய் வீட்டில் வைத்து ரீப்பர் கட்டையால் அடித்து உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இவரை நள்ளிரவில், பவானி பழைய காவிரி பாலம் பகுதியில் விட்டு விட்டு சென்று உள்ளனர். வழியில் வந்த நபர்களின் உதவியுடன் குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News