கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.;
கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். இதில் முதல்வர் ரேணுகா வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதல்வர் ரேணுகா பேசியதாவது:
கொத்தடிமை தொழிலாளி முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவரும் சமம் எனும் நிலை உருவாக வேண்டும். மனிதர்கள் அனைவரிடத்தில் ஒரே மாதிரி பழக வேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ரமேஷ், ஞானதீபன் உள்பட மாணவர், மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.
படவிளக்கம் : குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.