மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிமையாக்க கோரி மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிமையாக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-02-01 15:15 GMT

மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிமையாக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:

குமாரபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்காக நாமக்கல் சென்று வருகிறார்கள். அங்கே சென்று வந்தாலும் ஒரு சிலருக்கு காப்பீடு அட்டையில் பிழை திருத்தங்கள் ஏற்படுவதால் மருத்துவ சிகிச்சை பெற அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல் மருத்துவ காப்பீடு அட்டை பெற்று இருந்தவர்கள் அதனை பயன்பாட்டில் செயல் படுத்தாமல் இருந்தால் அவர்களின் கார்டை ரத்து செய்து விடுவதாக தெரிவிக்கின்றனர். இதன் விபரங்களை பொதுமக்களுக்கு விபரமாக தெரியப்படுத்துமாறு, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் பொது மக்களின் நலன் கருதி குமாரபாளையம் தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம்,மற்றும் அனைத்து சேவை மையங்களில் மருத்துவ காப்பீடு அட்டை எளிமையாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் : சித்ரா, மக்கள் நீதி மய்யம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர்.

Tags:    

Similar News