கை,கால் அழுத்தி விட சொன்ன அரசு பள்ளி ஆசிரியர் தாசில்தார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

குமாரபாளையம் அருகே நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மாணவிகளை தனது கை கால்களை அமுக்கி விடக்கூறியதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் காவல் துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.;

Update: 2025-01-28 12:00 GMT

கை,கால் அழுத்தி விட சொன்ன அரசு பள்ளி ஆசிரியர்

தாசில்தார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

குமாரபாளையம் அருகே நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மாணவிகளை தனது கை கால்களை அமுக்கி விடக்கூறியதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் காவல் துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.

குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நந்தகுமார் என்பவர் மதிய நேரங்களில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளை தனது கை,கால்களை அமுக்கி விடுமாறு கூறுவதுடன், மாணவிகளை தொடக்கூடாத பகுதிகளில் தடவி விடுவதாகவும் மாணவிகள் கூறிய தகவலின் அடிப்படையில் இன்று திடீரென பள்ளியை மாணவிகளின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறை சார்பில் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்த சென்றனர் அப்பொழுது இன்று பள்ளியில் அறிவியல் ஆசிரியர் நந்தகுமார் விடுப்பில் உள்ளதால் கல்வித் துறை அதிகாரிகளை வரவழைத்து மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி துறை ரீதியான அளவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறி சென்றனர். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் மீது மாணவிகள் புகார் கூறியதால், தாசில்தார், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News