ராசிபுரம் அருகே கல்லுாரிமாணவியை கடத்திய வழக்கில் 6 பேர் கைது!

தனியார் கல்லுாரியில் 3-ம் ஆண்டு பி.இ., படித்து வந்த மாணவியை கடந்த 31-ம் தேதி மாலை, கல்லுாரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.;

Update: 2025-02-03 11:30 GMT

நாமக்கல் : ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம், மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் விஜயஸ்ரீ (21); தனியார் கல்லுாரியில், 3-ம் ஆண்டு பி.இ., படித்து வருகிறார். கடந்த 31 மாலை, கல்லுாரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

புகார் அளித்த மாணவியின் பெற்றோர்

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிங்களாந்தபுரத்தை சேர்ந்த மேஸ்திரி தமிழ்பாண்டியன் (32), என்பவர் மாணவியை கடத்தியது தெரியவந்தது.

கடத்தல்காரரின் தலைமறைவு

இந்நிலையில், விஜயஸ்ரீயை கடத்திய தமிழ்பாண்டியன், தன்னுடன் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பூவரசன் (34), மாயக்கண்ணன்(27) ஆகியோர் வீடுகளுக்கு சென்று தங்கி இருப்பது தெரியவந்தது.

மாணவியை மீட்ட போலீசார்

நேற்று காலை, பூவரசன் வீட்டிற்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.மேலும், மாணவியை கடத்திய தமிழ்பாண்டியன், கடத்தலுக்கு உதவிய சிங்களாந்தபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (25), மோகனூரைச் சேர்ந்த கார்த்திக் (32) , ஆரியூரை சேர்ந்த ரமேஷ் (31) , தங்குவதற்கு வீடு கொடுத்த பூவரசன், மாயக்கண்ணன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மாணவியை, விசாரணைக்குபின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News