தொழில் முனைவோருக்கு திறன்பயிற்சி: நாளை நேர்முக தேர்வு..!
தொழில் முனைவோருக்கு திறன்பயிற்சி: நாளை நேர்முக தேர்வு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சிக்கான நேர்முக தேர்வு, நாளை, மோகனுார் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது என இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
மத்திய அரசின் தேசிய வள அமைப்பான (நேஷனல் ரிசோர்ஸ் ஆர்கனிசேஷன்) அகமதாபாத்தை சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் நாமக்கல் மாவட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 40 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கிறது.
பயிற்சி விபரங்கள்
இதில் துணி, சணல் பொருட்களில் இருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மணிபர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்கான ஒரு மாத கால இலவச பயிற்சி, மோகனுார் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் அடங்குபவை
இந்த பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் பலன்கள்
பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு நாளை காலை 10:00 மணிக்கு கல்லாரி வளாகத்தில் நடக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை
தொடர்பு எண்கள் 8825812528, 8870449677
விண்ணப்பிக்கும் முறை விருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தங்கள் பெயரை முன்பதிவு செய்து, தேவையான விபரங்களை பெற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.