நாகையில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா வெறிச்சோடியது

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் காரணமாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.

Update: 2021-04-25 03:13 GMT

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமெடுத்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாவட்ட காவல்துறை சார்பாக நாகை மாவட்டத்தில் வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாகை மீன்பிடி துறைமுகம், பேருந்து நிலையம், பள்ளிக் ஆபிஸ் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

எப்பொழுதும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரை சுற்றுலா வாசிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நாகூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டதுடன், நாகை புதிய பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டான்ட் உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது., 

Tags:    

Similar News