வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Update: 2023-11-30 15:42 GMT
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்மிகு வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில்  உள்ளது. இந்த கோவிலானது மூர்த்தி, தளம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும், சம்பந்தரும், தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்த வரலாற்று சிறப்பு பெற்ற இடம்.

இந்த கோவிலில் கார்த்திகை 2-வதுசோம வார்த்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் மற்றும் 1008 சங்குகளில் புனித நீரால் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள், சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வேதாரண்யம் விளக்கு அழகு என்ற பெருமைக்கேற்ப சாமி சன்னதியில் உள்ள தோரண விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாககாட்சியளித்தது. பின்பு வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை உபயதாரர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 

Tags:    

Similar News