மொத்த விற்பனையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் அழைப்பு
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆவின் மொத்த விற்பனையாளர்கள் தேவை;
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆவின் பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மையான மற்றும் தரமிக்க ஆவின் பால் மற்றும் ஆவின் உபபொருட்களான நெய், வெண்ணெய், கோவா நறுமண மூட்டப்பட்ட பால், பாதாம் மிக்ஸ் பவுடர், மைசூர்பா, ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவற்றை அரசு நிர்ணயித்துள்ள நியாயமான விலையில் வழங்கி வருகிறது.
மேலும் ஐஸ்கிரீம் வகைகளான குல்ஃபி, கோன், சாக்கோபார், கப் வகைகள் (50ml, 100ml, 500ml, 1000ml, 4500ml) ஆகியவை அனைத்தும் தற்போது தாராளமாக வழங்கி வருகிறது. ஆவின் பால் மற்றும் ஆவின் உபபொருட்களில் எந்த விதமான ரசாயணமோ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணங்களோ மற்றும் சுவையூட்டிகளோ கிடையாது. மேற்கண்ட அனைத்து ஆவின் பொருட்களும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்குமாறு அந்தந்த பகுதி முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆவின் பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்தை வேலை நாட்களில் 31.10.2023 வரை காலை 10. மணி முதல் மாலை 5. மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் (தஞ்சாவூர் -8015304733, மயிலாடுதுறை-9385679957, திருவாருர்-8015304771, மேலாளர் (விற்பனை)-8220205137). ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் அரசின் அறிவுறுத்தலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.