மதுரை அரசு பள்ளியில் தமிழ் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

Tamil Traditional Sports Festival at Madurai School

Update: 2022-07-01 08:45 GMT

மதுரை, ஒத்தக்கடை பகுதியில் செயல்பட்டு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பாரம்பரிய விளையாட்டுத்திருவிழாவில் பங்கேற்ற மாணவிகள்

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது.

மதுரை, ஒத்தக்கடை பகுதியில் செயல்பட்டு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு, தனியார் தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழ் பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பம், கண்ணாம்பூச்சி, ஓட்டப்போட்டி, பல்லாங்குழி, தாயப்போட்டி, ஆடி புலியாட்டம், நொண்டியாட்டம், கயிறு தாண்டுதல், கோ-கோ, என, பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் உற்சாகமாக வும், ஆர்வமாகவும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு போட்டியில், வெற்றி பெறும் மூன்று மாணவிகளுக்கு பாராட்டு கேடயங்களும், சான்றிதழ்களும் பரிசாக அளிக்கப்பட உள்ளன.தமிழ் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள், பள்ளியில் நடத்தப்பட்டதன் மூலம் மாணவிகள் மகிழ்ச்சி, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை மறந்து உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும், ஒரு லட்சம் மாணவர்களை பங்கேற்க வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News