பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை மேலமாசி வீதியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., பெருமாள் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-10-16 14:26 GMT

மதுரையில், பணியில் இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ பெருமாள் (கோப்பு படம்)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  புத்தாடைகள் வாங்குவதற்கும், வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மதுரை மாநகரில் உள்ள நான்கு மாசி வீதிகளிலும்,  பொது மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை க்ரைம் பிராஞ்ச் காவலர் குடியிருப்பில் வசித்த பெருமாள் (வயது 52) திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றினார். இந்நிலையில், இன்று மேலமாசி வீதி அருகே உள்ள மதனகோபால சுவாமி கோயில் அருகே பணியில் இருந்த பெருமாள், திடீரென  மயங்கி விழுந்தார். அருகில் பணியில் இருந்த சக போலீசார், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பரிசோதனை செய்த டாக்டர்கள், பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த பெருமாளின் சடலம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்தபோது, போலீஸ்  சிறப்பு எஸ்.ஐ உயிரிழந்த சம்பவம், மதுரை போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News