சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு நடைபெற்றது.;

Update: 2024-05-14 08:11 GMT

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேருக்கு பிரம்மா குதிரை சிலைகள் கண் திறப்பு விழா நடந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு புதிதாக மரத்தேர் செய்யப்பட்டு ஒவ்வொரு திருவிழாவிற்க்கும் 16ஆம் நாள் மண்டகபடியில் தேர் திருவிழா நடந்து வருகிறது.  இந்த தேருக்கு பிரம்மா, நான்கு குதிரை சிலைகள் செய்வதற்கு நிர்வாகத்தினர் முயற்சி செய்தனர். இங்குள்ள கடலை கடை சக்திவேல் தனம் அம்மாள் குடும்பத்தினர் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நான்கு குதிரைகள், பிரம்மா செய்து இதற்கான கண் திறப்பு விழா நடந்தது.

இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் புனித நீர் குடங்களுக்கு பூஜைகள் செய்தார். இதைத் தொடர்ந்து புனித நீர்குடத்தை எடுத்து கோவிலை வலம் வந்து தேர் முன்பாக வந்து பூஜைகள் செய்தார். இங்கு சிற்பி பிரம்மா மற்றும் நான்கு குதிரைகளுக்கு கண் திறந்து கண்ணாடி காண்பித்தார்.

இதில் கடலைக்கடை சரவணன், வித்யா குடும்பத்தினர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) சுதா, கோவில் பணியாளர் பூபதி,கவிதா,பிரியா, வசந்த்,முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், தொழிலதிபர்கள் ரகுராமர்,மோகன், ஜவஹர்லால், வர்த்தகர்கள் சங்கச் செயலாளர் ஆதி. பெருமாள், பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள், சீர்பாதாங்கிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

Tags:    

Similar News