மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட அன்னதானம்
மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.;
மதுரை அருகே குமாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது 70-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர்.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரம் பகுதியில் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டஅதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு, மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் எம் வி கருப்பையா, மாணிக்கம், உசிலம்பட்டி மகேந்திரன், மற்றும் அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், துரை தன்ராஜ், ஒன்றியச் செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ் செல்லம்பட்டி எம் வி பி ராஜா, மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கலர் கலந்து கொண்டனர்.