மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி

மதுரையில் நடந்த உலக அன்னையர் தின விழாவில் சமைத்த உணவுகள் தாயாருக்கு வழங்கப்பட்டது.;

Update: 2024-05-13 08:58 GMT

மதுரையில் நடைபெற்ற அன்னையர் தின விழாவில் உணவு தயாரிக்கப்பட்டது.

மதுரைஅருகே உலக அன்னையர் தினம், மதுரை அமிக்கா ஓட்டலிலில்  கொண்டாடப்பட்டது. வித்தியாசமான நிகழ்வாக தாயாருக்கு பிடித்த உணவு வகைகளை சமையல் கலைஞர் உதவியுடன் மகள், அல்லது மகன் தயார் செய்து தயாரிக்கும் வழங்கும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை அமிக்கா பசுமை மதுரை இயக்கம், அமிக்கா ஓட்டல் இணைந்து "உலக அன்னையர் தின விழா " கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், அமிக்கா நிறுவனத்தின் சார்பாக ஆன்லைன் மூலம் அன்னையர் நினைவுகளை சிறப்பாக கூறி போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று நபர்களை தேர்வு செய்தனர்.

பாத்திமா கல்லூரி பகுதியை சேர்ந்த முதல் பரிசு பெற்ற கீதா , இரண்டாவது பரிசாக மண்டேல நகர் தர்ஷிணா, மூன்றாவது பரிசாக அனிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை "நெல்லை பாலு " வாழ்த்து கூறி துவக்கி வைத்தார்.

மேலும், போட்டியில் வெற்றி பெற்ற குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் ,சிறப்பு விருந்தினராக அன்னையரை போற்றும் விதமாக மங்கையர்கரசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் உமா பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது உலகில் எல்லா அறைகளிலும் சென்று வர முடியும். ஆனால், ஒரு அறையில் திரும்ப செல்ல முடியாது அது தாயின் கருவரை மட்டுமே என குறிப்பிட்டார். மேலும் உலக அன்னையர் தின விழா கேள்வி பதில் நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பசுமை மதுரை இயக்கம் சார்பில் பொதுமேலாளார் பால் அதியச ராஜ், தலைமை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி, மேலாளர் அர்ஜீன் ஆகியோர் மரக்கன்றுகள் பரிசாக வழங்கினர்.

மேலும் மதிய உணவு அன்னையர் தின விழாவில் பங்கேற்ற 67 பேருக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது. அன்னையருக்கு பிடித்தமான உணவுகளை தயார் செய்து வழங்க தலைமை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி, ஏற்பாடு செய்திருந்தார்.

அமிக்கல் பசுமை மதுரை இயக்கம் சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகளை, பொது மேலாளர் பால் அதிசய ராஜ் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News