மதுரையில் கருணாநிதி பெயரில் கட்டப்படும் நவீன நூலகத்தை தமிழக முதல்வர் ஆய்வு

மதுரையில் தல்லாகுளம் பகுதியில் கட்டப்படும் கருணாநிதி நூலகத்தை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்.

Update: 2022-06-07 15:00 GMT

மதுரைக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது

மதுரைக்கு வந்த  தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மதுரையில் தல்லாகுளம் பகுதியில் கட்டப்படும் கருணாநிதி நூலகத்தை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக ,தமிழக முதல்வருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர் .இதையடுத்து, மதுரையில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும், கலைஞர் நவீன நூலகத்தை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .தமிழக முதல்வருடன், பொதுப்பணித்துறை அமைச்சர்எ.வ. வேலு, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News