கரூர் பசுபதிபாளையம் எஸ்.டி. பி ஐ. கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

கரூர் பசுபதிபாளையம் எஸ்.டி. பி ஐ. கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-26 16:14 GMT

கரூர் எஸ்.டி.பி.ஐ.  அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் சோசியல் டெமாக்கிரட்டி பார்ட்டி ஆப் இந்தியா கட்சி அலுவலகத்தில் 73-ஆவது குடியரசு தின நடந்தது. விழாவையொட்டி கருவூர் திருக்குறள் பேரவைச் செயலாளர் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் மூவர்ணக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது., அடிமை இந்தியா சுதந்திர நாடாக மாற பல இன்னுயிர்களை பலி கொடுத்து இன்னல் பட்ட வரலாற்றில் எல்லா மதத்தினருக்கும் பங்கு உண்டு என்றும்,, வேலாயுதம்பாளையம் அருகே போர் தடவாளங்களுடன் வந்த ரயில் வண்டியை கவிழ்க்க திட்டமிடுதலில் நிறை மாத கர்ப்பிணியான இஸ்லாமிய சகோதரியும் வரலாற்று பதிவு பெற்றிருக்கிறார் என்றும் கூறினார்.

மேலும், எல்லா மதங்களும் அற நூல்களும் அன்பு - அறம் - ஒழுக்கம் - பண்பாடு இவற்றையே வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் அன்றாட கடமைகளை நிறைவேற்ற வேண்டுகிறார். மேலும், அற நூலாம் வள்ளுவம் மிக உயரிய அறமாக அழுக்காறு - அவா -வெகுளி - இன்னாச் சொல் தவிர்க்க வேண்டுகிறது. பெற்ற குடியரசிற்கு பெருமை சேர்க்க மத நல்லிணக்கத்தை கடைப்பிடிப்போம் என்றார், இந்நிகழ்ச்சியில் திரளான எஸ்.டி.பி.ஐ அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News