கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவுக்கு சமூக நல ஆர்வலர்கள் பாராட்டு

வட்டாட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை உடனடியாக அகற்ற கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவுக்கு சமூக நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-02-01 18:54 GMT

உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய அலுவலகங்களிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நுழையும் முன்பு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு விளம்பரம், இருபுறமும் இருந்ததோடு, அதில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் ஒரு புறமும், மற்றொருபுறம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புகைப்படங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் வட்டாட்சியர் அலுவலகத்தின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்தன.

இதனை நமது இணையதளம் மூலம் சுற்றிக் காண்பித்த நிலையில், இரவு நேரத்தில் உடனடியாக அந்த இரு பிளக்ஸ்களையும் உடனடியாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கர் அந்த பதாகைகளை அகற்றுமாறு வட்டாட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உடனடியாக அந்த விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்றினார். கரூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவு மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் நடுநிலையோடு செயல்பட்ட கரூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News