ஊரக உள்ளாட்சி தேர்தல்: கரூர் ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஊரக உள்ளாட்சியில் 15 பதவிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை ஆட்சியர் பிரபுசங்கர், பார்வையாளர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-09-24 14:45 GMT

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் பாரவையாளர் கணேஷ், ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் 15 பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் கணேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம்,   தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தையும், வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்குப் பதிவுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News