ஆன்லைன் மருந்து வணிகம் தடை: மருந்தாளுநர்கள் கோரிக்கை

உலக மருந்தாளுநர் தின நிகழ்வில், ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-09-25 16:30 GMT

உலக மருந்தாளுநர் தின விழாவில் கலந்து கொண்ட மருந்தாளுநர்கள்.

உலக மருந்தாளுனர்கள் தினத்தையொட்டி கரூரில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மருந்தாளுநர்கள் அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் மேலை பழனியப்பன் தலைமை வகித்தார். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் வள்ளியப்பன், கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கிராமப்புறங்களில் பொதுமக்களின் நலன் கருதி நடத்தப்படுகின்ற முதலுதவி சிகிச்சை மையத்தில் ஆலோசகர்களாக மருந்தாளுநர்களை பணியமர்த்தி உரிய மதிப்பூதியம் வழங்க வேண்டும். மருந்தாளுநர்களின் படிப்புக்கு ஏற்றார்போல் அவர்களுக்கு உயரிய வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும். அரசு பணியில் இல்லாத மருந்தாளுனர்களுக்கு அரசுப்பணி கிடைக்கின்ற வரையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 10,000 சிறப்பூதியம் வழங்க வேண்டும்.'

மேலும், மருந்தாளுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

Similar News