மின் கட்டணம் கட்ட கால அவகாசம் தேவைப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2021-06-15 07:05 GMT

 ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவைப் படாது என நினைக்கின்றேன் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூரில் குடும்ப அட்டைகளுக்கு 14 வகையான பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை வழங்கும் திட்டதை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்சமயம் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவையில்லை என நினைக்கின்றேன். கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து முதல்வர் முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

அதிமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அப்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பாஜகவினரும் இப்பொழுது டாஸ்மாக் கடைகளை மூட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர் அவர்கள் முதலில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கட்டும்.

பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களைஞ கடத்தி வருவது, கள்ளச் சாரயம் போன்றவற்றை தடுக்க, 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்றார்.

Tags:    

Similar News