கரூரில் தேசிய ஊட்டச்சத்து மாதம்: ஆட்சியர் தொடக்கி வைப்பு

கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

Update: 2021-09-01 16:37 GMT

கரூர் ஆட்சியர் தலைமையில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்கும் அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்க நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.  ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊட்டச்சத்து உறுதி மொழியை, அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த விழிப்புணர்வு விழாவில் கைகழுவுதல் , ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு, வினாடி - வினா நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா நிகழ்ச்சிகள், காய்கறி தோட்டம் அமைத்தல் , செல்பி வித் விட்டமின் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட உள்ளது. மேலும், கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், ஒரு மாதம் நடைபெறும் இந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவில் அனைத்து துறைகளும் கலந்துகொண்டு "ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்" என்ற கருத்தை வலியுறுத்தி ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் நிகழ்சிகள் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்ராச்சலம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட மாவட்ட திட்ட அலுவலர் நாகலட்சுமி, மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட, வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News