இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு: உதவி கோரும் கல்லூரி மாணவி

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த கல்லூரி மாணவி மாற்று சிறுநீரகம் பொருத்த உதவுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார்.

Update: 2021-09-27 16:07 GMT

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால்  மாற்று சிறுநீரகம் பொருத்த உதவுமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்த கல்லூரி மாணவி் சௌமியா.





கரூர் மாவட்ட தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி சௌமியா. பிஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடமாக இரண்டு சிறுநீரகமம் பாதிக்கப்பட்டடுள்ளது. இதனால் வாரத்திற்கு மூன்று முறை டயாலிஸிஸ்  மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 700 வது நபராக பதிவு செய்துள்ளார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு தந்தை இறந்த நிலையில் தாயார் புனிதா கூலி வேலை செய்து மருத்துவச் செலவு செய்து வருகின்றார். இந்நிலையில் மருத்துவ செலவுக்கு மட்டும் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து வந்த நிலையில்,  தற்போது கொரனா நெருக்கடி காலம் என்பதால் போதுமான வேலை கிடைக்காத நிலையில் தன் மகளுக்கு காப்பீடு திட்டத்தில் டயாலிஸிஸ் மேற்கொண்டாலும், ஊசி, மருந்து பொருட்களை வாங்கவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வறுமையில் வாடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மகளுக்கு தமிழக அரசு மருத்துவ உதவி செய்ய வலியுறுத்தி ஆட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து மாணவியின் தாயார் புனிதா கூறியதாவது:  கடந்த 6 வருட காலமாக சிறுநீரக பாதிப்பால் மகள் செளமியா அவதிப்பட்டு வருகிறார். தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ 12 லட்சம் வரை செலவாகும். இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டடுள்ளது. ஆனால் 700 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், தனது மகளுக்கு சிறுநீரக தானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழக அரசு உயிரை காப்பாற்ற போராடும் தனது மகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவி புரிய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News