கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி

Karur News , Karur News Today-கரூரில் சுட்டெரிக்கும் வெயிலால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-04-01 16:20 GMT

Karur News , Karur News Today- வெயலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,  கரூர் மாவட்ட மக்கள் அவதிப்படுகின்றனர். (கோப்பு படம்)

Karur News , Karur News Today- கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் உச்சத்தை தொடும். இந்த கால கட்டத்தில் தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அந்தவகையில் கரூரிலும் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். அவ்வப்போது மழை வருவது போன்று இருந்தாலும், மழை பெய்யவில்லை. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது. அந்தவகையில் கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்லமுடியாத அளவிற்கு வெயில் உள்ளது.


இந்நிலையில் கரூரில், காலை முதலே வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் அளவு அதிகரித்து கடுமையாக இருந்தது. சாலைகளில் கானல்நீர் தெரிந்தது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள சாலைகளில் குடைபிடித்தப்படி சென்றனர். சிலர் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும் சென்றனர். 

வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி கொண்டு சென்றனர். மேலும் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் வியர்வையில் நனைந்தனர். இதற்கிடையில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழச்சாறுகளை அருந்தினர். மேலும் தர்பூசணி பழங்கள், நுங்கு உள்பட பல்வேறு பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ரோட்டோரங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் கம்மங்கூழ், மோர் மற்றும் இளநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஓட்டல்களில் உள்ள கூட்டத்தை விட, பழச்சாறு, கம்மங்கூழ், மோர் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில், சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது; அதுபோல், கரூர் மாவட்டத்திலும் கோடை மழை பெய்தால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும், என்பது கரூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News