கரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடையணிந்து கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடையணிந்து கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-17 05:03 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொரோனா நோயாளிகளை கவசவுடையணிந்து நேரில் பார்வையிட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியராக  பொறுப்பேற்றுள்ள டாக்டர் பிரபு சங்கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில்  பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் திடீர் ஆய்வு செய்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக  டாக்டர் பிரபுசங்கர் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு கொரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும்,  மற்றும் வசதிகள் குறித்து  கேட்டறிந்த ஆட்சியர்.     பின்னர் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து நலம் விசரித்து  ஆறுதல் கூறினார்.  ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News